குரூப்-4 முறைகேடு.! தலைமறைவாக இருந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை..?

Default Image
  • குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது.
  • இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட  99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  இடைத்தரகர்கள் , அரசு ஊழியர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்து உள்ளனர்.மேலும் இந்த முறைகேட்டில் இன்னும் யார் யார் உள்ளார்கள் என தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் ,தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும்  அவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

வேல்முருகன், காவலர் சித்தாண்டியின் தம்பி இவர் குரூப்-2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம்பிடித்து காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில்கடந்த 2018-ம் ஆண்டு  சேர்ந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்