குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு பணியாளர்களை கைது செய்தது சிபிசிஐடி போலீசார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 அரசு பணியாளர்களை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் இருவரும் முறைகேடாக தேர்ச்சிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…