குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடு.! ஒரே குடும்பத்தில் 4 பேர் மாநில அளவில் ரேங்க்..! காவலர் சித்தாண்டி தலைமறைவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது.
  • இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிசி ) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவரது சகோதரரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், என தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் காவலர் சித்தாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, குரூப் 4 தேர்வைப் போல், ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2-ஏ தேர்வை முறைகேடாக எழுதி வெற்றி பெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள 37 அதிகாரிகளை, விசாரணைக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, 1,953 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரத்தில் குரூப் 2 ஏ தேர்வை எழுதி, தரவரிசைப் பட்டியலில் முதல் 37 இடங்களில் தேர்வாகி, தற்போது அரசுப் பணியில் உள்ள 23 பெண்கள், 14 ஆண்களை, நேரில் விசாரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதி, அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு, டிஎன்பிஎஸ்சி சம்மன் அனுப்ப உள்ளது. தவறு நடந்திருப்பது உறுதியானால், 37 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், 2017-ல் நடைபெற்ற குரூப் 2-ஏ தேர்வு தரவரிசையிலும், மாற்றம் கொண்டு வர, டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

11 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago