குரூப் 2, குரூப் 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2A முதன்மை தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி, தேர்வு முறையில் ஆட்களை தேர்வு செய்கிறது.
இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தமிழகம் முழுதும் 20 மையங்களில் நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வன பயிற்சியாளர் பணி, புள்ளியியல் துறை, நூலகர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் அடுத்தமாதம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.