குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…
குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது.
குளறுபடிகள் : ஆனால் தேர்வு தொடங்கும் முன்னர் ஒரு சில மையங்களில் தேர்வர்களின் பதிவெண்களில் சில குளறுபடிகள் ஏற்பட்டு இருந்து, பின்னர் அவை சரி செய்யப்பட்டு சில இடங்களில் தாமதமாக தேர்வுகள் தொடங்கப்பட்டன.
இபிஎஸ் வலியுறுத்தல் : குரூப் 2 முதன்மை தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியதால் பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வு நடந்தது. இதன் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.