குரூப் 1 தேர்வு மாதிரி விடைகள் – அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகள் குறித்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
குரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி 2021-ல் நடந்த குரூப் 1 தேர்வில் 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகளில் 60 விடைகள் தவறாக இருந்ததை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே அமைத்த குழு ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என் கூறியதால் வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிபுணர் குழு அமைத்து அனைத்து கேள்விக்கான பதிலை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.