கிரைண்டர் கல்லால் கணவனின் மண்டையை உடைத்து மனைவி வெறிச்செயல்..!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் அங்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஞானம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது.
அவர் வேலை பார்க்கும் இடத்தில், அவருடன் வேலைக்கு வரும் சித்தாள் பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக, மனைவி ஞானம்மாளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கிரைண்டர் கல்லை எடுத்து வேலுவின் மண்டையில் தாக்கினார் ஞானம். இதில் பலத்த காயம் அடைந்த வேலு, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.