மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி முதல்வர் கைது..!

Green Paradise Cbse School

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் சிபிஎஸ் பள்ளி இயங்கி வருகிறது.   இந்த பள்ளியின் முதல்வரும், நிறுவனருமான கார்த்திகேயன்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில்  கைது செய்யப்பட்டார்.

பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக பல மாணவர்களை அவர் தனி அறையில் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்து பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்…தேதி மாற்றம்..!

இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  பின்னர் பலகட்ட விசாரணை நடந்த நிலையில் இன்று காலை முதல்வர் கார்த்திகேயன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதல்வர் கார்த்திகேயனை விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்