பசுமை மயானங்கள்! அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பசுமை மயானங்களை உருவாக்க தலைமை செயலாளர் உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “பசுமை மயானங்களை” உருவாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளும் உரிய பராமரிப்புடன் சுத்தமாக பேணி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பசுமை மயானங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, ஆங்காங்கே பூச்செடிகள் வைத்து, மரக்கன்றுகள் நடவேண்டும். மேலும், பொதுமக்கள் நிழலில் நிற்பதற்கு வசதியாக கொட்டகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.