தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் வெட்டும் போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலை வெட்டியதாக கூறப்படுகிறது. குழந்தையின் கட்டைவிரலின் பெரும்பகுதி இல்லாததால், பெற்றோர்கள் கதறி அழுதனர்.
பின்பு குழந்தையின் விரலை சேர்த்து தையல் போட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு பின்புதான் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…