பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு….! மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்..!

Default Image
  • குழந்தையின் கையில் இருந்த பிளாங்ஸ்டரை வெட்டும் போது, தவறுதலாக குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டுள்ளது.
  • மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே  செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் வெட்டும் போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலை வெட்டியதாக கூறப்படுகிறது. குழந்தையின் கட்டைவிரலின் பெரும்பகுதி இல்லாததால், பெற்றோர்கள் கதறி அழுதனர்.

பின்பு குழந்தையின் விரலை சேர்த்து தையல் போட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு பின்புதான் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்