பெரும் அதிர்ச்சி…தமிழக அரசே இதற்கு உடனடியாக தீர்வு வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

Published by
Edison

வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு,மாணவர் நலன் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுங்கோன்மையானது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித
நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது.

உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம்.அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

43 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

46 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago