பெரும் நிம்மதி…தமிழகம் to டெல்லிக்கு பறந்த ஓபிஎஸ் கடிதம்!
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து இருப்பது,தமிழக ஜவுளித் தொழிலுக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மத்திய வர்த்தக,தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே,பருத்தி நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு கடந்த 2021 டிசம்பர் 18 அன்று ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள் மத்திய அமைச்சர் @PiyushGoyal அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.#textiles pic.twitter.com/9TW8ezGC35
— AIADMK (@AIADMKOfficial) April 16, 2022