2021-2022 பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(PMMSY)” கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22-ம் ஆண்டு பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) விருதுநகர் மாவட்டத்தில் திட்டச் செயலாக்கத்தில், புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் (2 ஹெக்), பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு செய்தல் (1000 ச.மீ), நீரினை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி மீன்வளர்ப்புச் செய்தல் (100 m3), போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 60% மானியமும் வழங்கப்படவுள்ளது.
எனவே மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் கீழ்க்காணும் விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
அலுவலக முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,
114 B27/1, வேல்சாமி நகர்,
விருதுநகர் – 626001.
தொலைபேசி எண். : 04562-244707
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…