சகாயம் குறித்த கிரானைட் முறைகேடு விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் விசாரணை ஆணையத்தை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைகோரிய வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணைக்குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை, முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டித்தல் உள்ளிட்ட 212 பரிந்துரைகளை சகாயம் ஆணையம் அளித்தது. தமிழக அரசின் பதில் மனுவில் சகாயம் குழுவின் 131 பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும், அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், சகாயம் ஆணையத்தின் பணிகள் முடிந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை விசாரணையின் போது தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தை விடுவித்தும் விசாரணையை ஏப்ரல் 6-க்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.