மூதாட்டியின் குற்றச்சாட்டு., உல்டாவாக ராகுலிடம் மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி.!
மூதாட்டி கூறிய குற்றசாட்டை மறைத்து, ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ மக்களிடம் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
அப்போது, கூட்டத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர், புயல், மழை பாதிப்புகளின் பொது எங்க மக்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் இதோ இருக்கார் முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூட எங்களை வந்து பார்க்கவில்லை என்றும் கண்டுகொள்ளவில்லை எனவும் தைரியமாக, துணிச்சலாக முதல்வர் முன்பே ராகுலிடம் அந்த மூதாட்டி குற்றசாட்டினார்.
இதை கேட்டு திகைத்துப் போன முதல்வர் நாராயணசாமி தன் மீதான குற்றச்சாட்டை முழுவதும் மறைத்து, ராகுலிடம், புயல் மழை பாதிப்புகளின் போது, நாங்கள் அங்கு சென்று பார்த்ததாக கூறுகிறார் என்று நாரணயசாமி மாற்றி மொழிபெயர்த்தார். முதல்வர் நாராயணசாமியின் இந்த தவறான பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.