இரண்டாவதும் பெண் குழந்தை..!பேத்தியை பூச்சி மருந்து கொடுத்து கொன்ற பாட்டி ..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கூலித்தொழிலாளி ராஜா உள்ளார். இவரது மனைவி சத்யா இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாரூர் அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் ராஜாவின் தாய் பொட்டியம்மாள் கோபமடைந்தார். இதை தொடர்ந்து குழந்தையும் , தாயும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் பின்னர் ஒருநாள் சத்யா துணி துவைக்க சென்று உள்ளார்.
சத்யா திரும்பி வந்து பார்த்தபோது அந்த பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. பதறிப்போன தாய் சத்திய குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக பொட்டியம்மாள் கூறியுள்ளார். இதனால் வீட்டின் அருகே உள்ள மலை அடிவாரத்தில் குழந்தையும் , பால் பெட்டியும் புதைத்து உள்ளனர்.
சில நாட்கள் கழித்து தடுப்பூசி போடுவதற்கு சத்யாவின் வீட்டிற்கு அரசு செவிலியர் ஒருவர் வந்துள்ளார். குழந்தை எங்கே என கேட்டதற்கு குழந்தை மூச்சு திணறி இறந்து விடுவதாக சத்யா கூறியுள்ளார். உடனே அந்த அரசு செவிலியர் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் தான் பிறந்தது.பிறகு எப்படி குழந்தை இறந்தது என சந்தேகம் அடைந்த அவர் வட்டார மருத்துவ அலுவலர்களிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பொட்டியம்மாள் கொலை செய்தது தெரிய வந்தது. ராஜாவின் வீடு மலைப் பகுதியில் இருப்பதால் அங்கு பாம்பு , பூச்சி வராமல் இருப்பதாக வீட்டை சுற்றி மருந்து தெளிப்பது வழக்கம்.
சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து பச்சிளம் குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.
உடற்கூராய்வு , அதையும் உறுதிப்படுத்தவே ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள பொட்டியம்மாள்.