உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகம் அடைந்தே வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சிரோலி பகுதியை சேர்ந்தவர் மாலுபாய் அக்ரம் அவாலி. 68 வயதாகும் இவருக்கு ஒரு மகனும் ஒரு பேரனும் உள்ளான். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரின் மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதுகுறித்து மாலு பாய் அவரின் பேரனிடம் கேட்டபொழுது, பேரன் கொரோனா வைரஸ் குறித்தும், உலக அளவில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் பாட்டியிடம் கூறினான். இதைக் கேட்ட மாலு பாய், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…