திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீதும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர் காவலர்கள்.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று வீட்டை தாண்டி கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த கார் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனின் கார் என்று கண்டறிந்தனர். இதை அடுத்து, கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும், இந்த கொலையில் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…