பிறந்த 7 நாள் குழந்தையை கொன்ற பாட்டி கைது..!

7 நாள் குழந்தையை தலையணையால் அழுத்தி கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே சேர்ந்த சின்னச்சாமி – சிவப்பிரியா தம்பதிக்குகடந்த 10-ம் தேதி 3-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை 2 நாட்களுக்கு முன் உடல் நிலை குறைவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தை முகத்தில் காயம் இருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் சேர்க்கையாக மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தை பெற்றோர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையின் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டார். அவர் தான் இந்த குழந்தையை 7 நாள் குழந்தையை தலையணையால் அழுத்தி கொன்றதாக காவல்துறையிடம் பாட்டி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025