கிராம சபை கூட்டம்: தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

The Chennai High Court has ordered the Tamil Nadu government to respond within a week to the case seeking to hold Grama sabai meetings.

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விரசனைக்கு வந்தபோது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்காவிட்டாலும்  விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.