ரூ.1000 செலவில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்கள் இனி ரூ.5000 செலவில் நடத்தலாம் – தமிழக அரசு அறிவிப்பு
கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, கிராம ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 2022ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதனை ரூ.5000/ ஆக உயர்த்தி கிராம சபை / சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சிப் பொது நிதியில் மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில், கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.