அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்.!
தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வெளியான அறிக்கையில், கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது என்றும், கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாம். அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
மேலும், மே 1 ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.