GRAINS’ இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்..! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து, ‘GRAINS’ இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.
இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து, ‘GRAINS’ இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.