சட்டசபையில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்! 4000 பேர் விண்ணப்பம்
துப்புரவுப் பணியிடங்களுக்கு பி.இ., எம்.பி.ஏ., எம்.காம். உள்ளிட்ட பட்டங்கள் முடித்த பட்டதாரிகள் ஏராளமான நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளருக்கு 14 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.மேலும் அந்தப் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த பணிகளுக்கு இதுவரை 4000- அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதிலும் பி.இ., எம்.பி.ஏ., எம்.காம். உள்ளிட்ட பட்டங்கள் முடித்த பட்டதாரிகள் ஏராளமான நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு மாதம் ரூ.17000 வரை ஊதியமாக கிடைக்கும். மேலும், அரசின் இதர பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.