ஆறு ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பட்டதாரி இளைஞர்!
ஆறு ஆண்டுகளில் 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பட்டதாரி இளைஞர்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பர். ஆனால் இந்த வார்த்தைக்கு மாறாக பாம்பை கண்டால் மிகவும் பக்குவமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வரும் பணியை செய்து வருகிறார் பட்டதாரி இளைஞரான ஷேக் உசைன்.
கடையநல்லூரை சேர்ந்த ஷேக் உசைன் (24), அமெரிக்கன் கல்லூரியில் இளங்களை பட்டம் பெற்றவர். இவர் சாரைப் பாம்பு முதல் ராஜநாகம் வரை எல்லா விதமான பாம்புகளையும் அச்சமில்லாமல் பக்குவமாக கையாளுகிறார். குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாம்புகள் புகுந்தால் வனத்துறையின் உதவியோடு மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடும் சேவையை செய்து வருகிறார்.
பாம்புகளை கொல்லக்கூடாது என்றும் அவைகளை பாதுகாப்பதே நம் கடமை எனவும் கூறும் இவர், ஆறு ஆண்டுகளில் 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விட்டுள்ளார். இவர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு பாம்புகளை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். இவரது இந்த சேவைக்கு அப்பகுதி மக்கள் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.