5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை – அமைச்சர் ஐ.பெரியசாமி..!
- 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
- அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குதல் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஐந்து பவுனுக்கு மிகாமல் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
— I.Periyasamy (@IPeriyasamymla) June 9, 2021