அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன.
இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை அமைக்க வேண்டும் என சுகதரத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.