நிலுவையில் உள்ள தமிழக ஜிஎஸ்டி தொகை ரூ.4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
- 33வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- நிலுவையில் உள்ள தமிழக ஜிஎஸ்டி தொகை ரூ.4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
33வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.அதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், நிலுவையில் உள்ள தமிழக ஜிஎஸ்டி தொகை ரூ.4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் .சில பொருட்களின் வரிகுறைப்பு, வரிவிலக்கு தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை தேவைப்படும்.
கோவையில் சிறு,சிறு இயந்திர பாகங்கள் தொடர்பான சில்லரை வேலைகள் மீதான வரியினை 18%ல் இருந்து 5%ஆக குறைக்க வேண்டும் .இயந்திரம், கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு வேறுபாடில்லாமல் ஒரே சீராக 12% வரி விதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.