மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது .இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இனிமேல் பீரின் விலை ரூ.10, ஒரு ஆஃப் விலை ரூ.20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ.10, ஒரு ஃபுல் விலை ரூ.40 என்று உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கமணி கூறுகையில், 5152 மதுக்கடைகள் தமிழகத்தில் உள்ளது. இதில் 2000 கடைகளில் மட்டுமே பார் இயங்கி வருகிறது. அரசின் வருவாயை பெருக்க மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…