மதுபானங்களின் விலை விலை உயர்வு !அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் – அமைச்சர் தங்கமணி

Default Image

மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு  ரூ.2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது .இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல்  உயர்த்தப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  இனிமேல் பீரின் விலை ரூ.10,  ஒரு ஆஃப் விலை ரூ.20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ.10, ஒரு ஃபுல் விலை ரூ.40 என்று உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கமணி கூறுகையில், 5152 மதுக்கடைகள் தமிழகத்தில் உள்ளது. இதில் 2000 கடைகளில் மட்டுமே பார் இயங்கி வருகிறது. அரசின் வருவாயை பெருக்க மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு  ரூ.2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்