கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கடட்டணம் ரத்து …!முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை…!அமைச்சர் தங்கமணி
புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கடட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடியாவிட்டாலும், அவர்களின் கூலியை உயர்த்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும்