அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு அவையை முடக்குகிறது – சு.வெங்கடேசன் எம்.பி
அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு
அவையை முடக்குகிறது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் துவங்கியது. அதன் பிறகு நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் மக்களவை கூடியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், வெளிநாட்டு குழு ஒன்று நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை கண்காணிக்க வந்துள்ளதாக குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அதானி குழும பங்குகளை எல்ஐசி வாங்கியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தில் மக்களவையை இன்று மதியம் இரண்டு மணி வரை ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதானியின் பங்குச்சந்தை முறைகேடு குறித்து கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு. உண்மையை வெளிக்கொண்டுவர போராடுகிறோம். அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு அவையை முடக்குகிறது. இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு.’ என பதிவிட்டுள்ளார்.
அதானியின் பங்குச்சந்தை முறைகேடு குறித்து கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்களின்
கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு.உண்மையை வெளிக்கொண்டுவர போராடுகிறோம்.
அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு
அவையை முடக்குகிறது.இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு. pic.twitter.com/Vya6Wabu9S
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 2, 2023