நீட் தேர்வில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு பள்ளி மாணவன்!

Default Image

தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித் குமார், நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள்.

இந்தநிலையில், நீட் தேர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் 56.44 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தில் 57.44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு 57.44% ஆக அதிகரித்துள்ளது.

இதில் திருப்புர் மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார் பட்டியை சேர்ந்தவர், நாராயணசாமி. ஆடு மேய்க்கும் கூலி தொழிலரான இவரின் மகன், ஜீவித் குமார். அரசு பள்ளி மாணவரான இவர், இந்தாண்டு நீட் தேர்வில் எழுதிய இவர், தமிழகளவில் முதலிடமும், இந்தியளவில் 10 ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீட் தேர்வு எழுதி, தமிழக அரசு பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் முதலிடம் பிடித்ததும், இந்தியளவில் இதுவே முதல் முறையாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்