அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது-முதலமைச்சர் பழனிசாமி
அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது .
கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.கல்வி தொலைக்காட்சி உருவாக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.