அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .
இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டுள்ளது.