ஒய்வு பெற்ற VAO களை காலி பணியிடங்களில் அமர்த்துவதா!தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழகத்தில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஒய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தாமல் ஒய்வு பெற்ற அதிகாரிகளையே மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணியில் அமர்த்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு, தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய எதிர் தரப்பு அரசு துறைகளில் 60 வயதிற்கு மேலானோர் ஒய்வு பெற வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில் ஒய்வு பெற்றவர்களை மீண்டும் எப்படி பணியில் அமர்த்த முடியும் என்று கேட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.