பள்ளித்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.!

பள்ளித்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடவும் உத்தரவிட்டனர்
இந்நிலையில், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கூடுதல் விலையில் விற்கக்கூடாது என உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தாக்க செய்யவேண்டும் என நீதிபதி அறிவித்தார். அப்பொழுது தமிழக அரசு கொரோனா முன்னேச்சரிக்கை நடவெடிக்கையாக தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்தொரு முடிவும் எடுக்கவில்லை என கூறினார். இது தொடர்பான விரிவான அறிக்கையை வரும் 23ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025