மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி கடந்த 1961-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில், வள்ளாலபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான புலிப்பட்டி, வலையபட்டி, அழகர்கோவில்,செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன. இதில், சில வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு மிகவும் சேதமடைந்திருந்தது. இதை அறிந்த முன்னாள் மாணவர்களான 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களில் பலர் தற்போது, ஐஏஎஸ், ஐஆர்எஸ் மற்றும் டாக்டர், இஞ்ஜினியர் மற்றும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அவர்கள் பள்ளியின் நிலைமையை அறிந்து தாம் படித்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர்.மேலும் பள்ளியை தத்தெடுத்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளனர். அதற்காக முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டிடங்களைச் சீரமைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிந்து புதுப்பிக்கட்ட கட்டிடங்களை ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த சீரமைப்பு நிகழ்ச்சியின் போது அப்பபள்ளியின் தலைமைஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மேலும், முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அல்லாரைசல் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் கண்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் வாசிமலை, கல்விக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைs செய்தனர்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…