நமது உடலில் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ மருத்துவரைதான் அனைவரும் நம்புகிறோம். ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த சேவையை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் சில நேரத்தில் செய்யும் சிறு அலட்சிய தவறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
கோவை, எம்.எஸ்.ஆர் புரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது, தவறுதலாக அந்த ஊசியின் சிறுபகுதி அந்த குழந்தையின் உடலில் இருந்துள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி அந்த குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 31-ம் தேதி கை மற்றும் கால்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது காலில், தடுப்பூசியின் சிறு முனை உடைந்து அந்த குழந்தை உடலில் இருந்து உள்ளது. இதனால், அந்த குழந்தை வலியால் துடித்தது. உடனே, பெற்றோர்கள் மருத்துவமனை செவிலியரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் அலட்சியப் போக்கில் ஒன்றுமில்லை தடுப்பூசி குத்தியதால் குழந்தை அழுகிறது என கூறி விட்டனர்.
உடனே ,வீட்டிற்கு வந்து அந்த குழந்தையை, பாட்டி குளிப்பாட்டி உள்ளார். அப்போது அவர் கையில் அந்த ஊசி குத்தி உள்ளது உடனே லாவகமாக அந்த ஊசியை குழந்தை உடலில் இருந்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவமனை முதன்மை மருத்துவர் இளஞ்செழியன் அவர்களிடம் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…