#BREAKING சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்..!!

strike

சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் சில இடஙக்ளில் மாநகர பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சைதாப்பேட்டை ,கே கே நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆவடி, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல் பணிமனை என பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பேருந்துகள் குறைந்து எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் இது மாலை நேரம் என்பதால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்