அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் கவனத்திற்கு..! போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
பேருந்தில் மாற்றுத்திறனாளிகளின் பயணத்தில் புகார் வராத வகையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிபுரிய வேண்டி அறிவுறுத்தல்.
மாற்றுத்திறனாளிகளை அரசு பேருந்துகளில் தக்க மரியாதை, கவுரவத்துடன் நடத்த வேண்டும் என்று அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தில் மாற்றுத்திறனாளிகளின் பயணத்தில் புகார் வராத வகையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிபுரிய வேண்டும் என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், அவர்தம் துணையாளர் பயணிக்க அனுமதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் இடையே தேவையற்ற பிரச்சனை ஏற்படுவதுடன் பொதுமக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கு ஏற்படுவதாகவும், இதை தவிர்க்கும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.