‘ஆளுநர் பதவி தேவையில்லை’ …’போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம்’ – தவெக செயல்திட்டம்.

தவெக கட்சியின் முதல் மாநாட்டில், மாநாட்டின் மேடையில் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.

Thalapathy Vijay

விழுப்புரம் : தவெக முதல் மாநாடு இன்று பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், தமிழக முதலில் அக்கட்சியின் தலைவர் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். அதன்பின், கட்சியின் செயல்திட்டம் மேடையில் அறிவிக்கப்பட்டது.

அந்த செயல்திட்டத்தில், “சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும்.

மது, போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம். மாவட்டந்தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனத்திற்குள் சமூகத்தை சுருக்க கூடாது. வர்ணாசிரம கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்பு. அரசு, தனியார் துறையில் அரசியல் தலையீடு கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூக நீதி அடிப்படையில் விகிதாச்சார பங்கீடு.

தமிழகம் முழுவதும் புதிய நீர் தேக்கங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அவசியம். தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம். அனைவரையும் சமமாக பார்க்கும் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படும்.

தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும். லஞ்ச, லாவன்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிக்கிறோம். தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்