விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த சிறுமி நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்நிலையில், சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும் என்றும் சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இதுபோன்ற சிறுமி, பெண்களை காப்பாற்றும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…