ஆளுநர் மதுரை வருகை…! கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்…!

Published by
லீனா

சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து வருகிறது. அந்த வகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்தும் அவர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பின்பும் ஆளுநர் ஒப்புதல் ஒப்புதல் வழங்கவில்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும் சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக  போராடி பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர் போல பேசிய ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.. சாய்ஸ் இருந்தால் நல்லதுதான்! – அண்ணாமலை

இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொள்கிறார். சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

2 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

2 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

3 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

4 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

5 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

6 hours ago