ஆளுநர் வருகை.. பெரியார் பல்கலை.யில் போலீசார் சோதனை..!

Published by
murugan

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி கைது செய்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்நிலையில், காவல்துறையினர் ‘பூட்டா்’ நிறுவனத்தின் தொடர்பான ஆவணங்களை பல்வேறு வகையில் கைப்பற்றினர்.  துணைவேந்தர் வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி அறிவியல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.  அந்த ஆவணங்கள் அடிப்படையில் பல பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இன்னும் சில ஆவணங்கள் அங்கு இருப்பதாக தகவல் கிடைத்த அடிப்படையில், காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பேராசிரியர் பெரியசாமி அலுவலகம் உட்பட பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 6 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு:

இதற்கிடையில் இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் செல்கின்றார். கைதாகி ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் துணைவேந்தர்  பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

இதற்கிடையில் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட துணைவேந்தர் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படாமல் உள்ள இந்த சூழ்நிலையில் ஆளுநர் அங்கு செல்வது கண்டனத்திற்கு உரியது. மேலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா போன்ற எந்தவித பெரிய நிகழ்ச்சியும் இல்லாத சூழ்நிலையில் ஆளுநர் அங்கு செல்வதற்கான அவசியம் என்ன..? எனக் கேள்வி எழுப்பிய ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று  சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Recent Posts

“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…

28 minutes ago

“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…

1 hour ago

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…

1 hour ago

தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…

1 hour ago

‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…

2 hours ago

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

2 hours ago