ஆளுநர் உரை ட்ரெய்லர் தான்…! என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதல்வர்

என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை ட்ரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025