ஆளுநரின் தேநீர் விருந்து – நான் பங்கேற்க இயலாது : திருமாவளவன்
ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திருமாவளவன் அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலாது என ட்வீட்.
தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவித்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு ஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி.
எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/GT6cAZq4no— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 13, 2022