ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!
ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு.
குடியரசு தினத்தன்று (நாளை) மாலை 4:30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக நாளை ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அதே சமயம், ஆளுநரின் தேநீர் விருந்தே புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.