ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ் புறக்கணிப்பு..!

RN Ravi

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் அன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்த தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக அறிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தொகுதி பங்கீடு… திமுக காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை..!

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை “ஆளுநரை நாங்கள் புறக்கணிக்கவில்லை, ஆளுநரின் நடவடிக்கை தான் புறக்கணிக்கிறோம். அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர் அரசியலமைப்பின் சட்டத்தை சிதைக்கிறார்.  வரலாற்றை சிதைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருகிறார்” என கூறினார்.

நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது” நேதாஜி சுபாஷ் சத்திர போஸ் இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலனளிக்கவில்லை” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்